vinayagar

ஸ்ரீ  ராம ஜெயம்
யாதவர் சங்கம
YATHAVAR ASSOCIATION

412, #06-414, Serangoon Road , Singapore - 218124

 

krishnar
Welcome to Yathavar Association (Singapore) WebSite
Home Events Contact Us About Us Enquiry Form

Main Menu

Committe Members
Yathavar History
Photo Gallery
Latest News
Membership Application Form
Change Of Address Form
Members Record
Meeting Minutes
 

 

 

Welcome to Yathavar Association (Singapore) Website

Yathavar Association Singapore's intention is to promote community's social, cultural, values and traditions among the new members.  To provide opportunities to the members to integrate within as well as other diverse communities.  The organisation will organize programs and activities to facilitate the young and all age groups to realize their identity, heritage and bond among each other.


For more detailed information contact :

 
E-mail - admin@sporeyathavar.org

 

The Main aim of this association is increasing the interaction among Yathavar's living in Singapore.

யது வம்ச மாவீரர்கள் சிலர்


கிரிதவர்மன் :

கிரிதவர்மன் இந்துதொன்மவியலில் மகாபாரதத்தின் கதை மாந்தர்களுள் ஒருவன். இவன், கண்ணனின் குலமான யாதவகுலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன். மகாபாரதம் தவிர விஷ்ணுபுராணம்,பாகவதம் மற்றும்அரிவம்சம் பழங்கதைகளிலும் இவன் பேசப்படுகிறான்.

குருச்சேத்திரப் போரில்கௌரவர்கள் பக்கம் தனது நாராயணி சேனையுடன் சேர்ந்து போரிட்டவன்.போரின் முடிவில்கௌரவர்கள் பக்கம் எஞ்சியிருந்தவர்கள் மூவரில் ஒருவன். அசுவத்தாமன் பழிக்குப் பழியாகஇரவில் தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னன்,சிகண்டி,பாஞ்சாலியின் ஐந்துசிறுவர்கள் என படுகொலை செய்த அநீதிக்கு துணை நின்றவன். போரின் முடிவில் நாடுதிரும்பி ஆண்டுவந்தபோது தனது யாதவ குலத்தைச் சேர்ந்த மற்றொரு மன்னனான சாத்யகியால்கொல்லப்பட்டான்.

பார்பரிகா :

பார்பரிகா இந்துதொன்மவியலில் மகாபாரதத்தில் பீமனின் மகன் கடோற்கஜனுக்கும் யாதவ அரசன் மூருவின் மகள்மௌர்விக்கும் பிறந்தவனாவான். யட்சனான பார்பரிகா மனிதனாக மறுபிறவி எடுத்தவன்.பாண்டவர்கள் பக்கம் போராட விரும்பினாலும் தனது தோற்கும் கட்சிக்கே ஆதரவு என்றகொள்கையால் கௌரவர்களுடன் சேர்ந்து கொள்கிறான்.

இராசத்தானில் பார்பரிகாகுருச்சேத்திரப் போரில் தனது தாத்தாக்களான பாண்டவர்கள் வெற்றி காண பலிகொடுக்கப்பட்டான் என நம்பப் படுகிறது.இந்த செய்கையால் கிருஷ்ணர் அவனைதெய்வமாக்குகிறார். அங்கு பார்பரிகா கதுஷ்யாம்ஜி எனவழிபடப்படுகிறார்.

காந்தாரி:

காந்தாரி மகாபாரதக் கதையில்வரும் ஒரு கதைமாந்தர் ஆவார். இவர் காந்தார நாட்டு (இன்றைய காந்தகார்) மன்னனானசுபலனின் மகள் ஆவார். இவரை குருவம்சத்தைச் சேர்ந்த திருதராஷ்டிரன் மணந்துகொண்டார்.

திருதராஷ்டிரன் பிறவிக்குருடர் ஆகையால் பதிபக்தியின் காரணமாககாந்தாரியும் தனது கண்களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தார். காந்தாரிக்கும்திருதராஷ்டிரனுக்கும் நூறு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். இவர்களது மகன்களேகௌரவர் எனப்பட்டனர்.

இவரது உயர்ந்த பதிபக்தியின் காரணமாக இவர் பல சக்திகள்பெற்று இருந்தார். தனது மகன்களைக் கொன்ற காரணத்தால் இவர் கிருஷ்ணனை சபித்தார்.இதுவே கிருஷ்ணரின் யாதவ வம்சத்தின் அழிவுக்குக் காரணமாகஅமைந்தது.

சாத்தியகி :

சாத்தியகி மகாபாரதத்தின் கதைமாந்தர்களுள் ஒருவன். யுயுதனன் என்றும் அழைக்கப்படும் இவன், கண்ணனின் குலமான யாதவகுலத்தைச் சேர்ந்த ஒரு வீரனாவான்.

சாத்யகி, கண்ணனிடமும், அருச்சுனனிடமும்மிகுந்த மதிப்பு வைத்திருந்தான். சாத்யகியும், அருச்சுனனும் துரோணரிடம் ஒன்றாகப்போர்ப் பயிற்சி பெற்றவர்கள். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்டபிணக்கில், சாத்தியகி பாண்டவர்களை ஆதரித்தான். கண்ணன் பாண்டவர்களுக்காகக்கௌரவர்களிடம் தூது சென்ற போது சாத்தியகியும் உடன் சென்றிருந்தான்.

பாரதப்போரில் கலந்துகொண்ட யாதவ குல வீரர்களுள் சாத்தியகியும், கிருதவர்மனும்முக்கியமானவர்கள். எனினும், இருவரும் எதிர்த் தரப்புகளில் சேர்ந்து போரிட்டனர்.சாத்தியகி பண்டவர்களுடன் சேர்ந்து போரிட, கிருதவர்மன் கௌரவர்கள் பக்கம் நின்றான்

 

 

 

Copyright 2013 Yathavar Association of Singapore                                                                                                                                                    Website Designed & Maintained by Mani