vinayagar

ஸ்ரீ  ராம ஜெயம்
யாதவர் சங்கம
YATHAVAR ASSOCIATION

412, #06-414, Serangoon Road , Singapore - 218124

 

krishnar
Welcome to Yathavar Association (Singapore) WebSite
Home Events Contact Us About Us Enquiry Form

Main Menu

Committe Members
Yathavar History
Photo Gallery
Latest News
Membership Application Form
Change Of Address Form
Members Record
Meeting Minutes
 

 

 

Welcome to Yathavar Association (Singapore) Website

Yathavar Association Singapore's intention is to promote community's social, cultural, values and traditions among the new members.  To provide opportunities to the members to integrate within as well as other diverse communities.  The organisation will organize programs and activities to facilitate the young and all age groups to realize their identity, heritage and bond among each other.


For more detailed information contact :

 
E-mail - admin@sporeyathavar.org

 

The Main aim of this association is increasing the interaction among Yathavar's living in Singapore.

கிருட்டிணன் இந்து சமய கடவுளாவார். இவர் விட்டுணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். மகாபாரத்திலும்பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அட்டமி திதி,உரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருட்ண ஜெயந்தியாக கொண்டாடப் படுகிறது.
கிருஷ்ணரின் கதை

இளமை
வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில்யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி,மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி,வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.
வாலிபம்
இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.
வாலிப வயதை அடைந்தவுடன் மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.
மகன்
கண்ணன் உபமன்யு முனிவரிடம் தனக்கு புத்திரபாக்கியம் வேண்டினார். அதற்கு உபமன்யு சிவபக்தியில் மூழ்கிநின்று, சிவபெருமானின் அருளைப் பெறுமாறு அறிவுரை வணங்கினார். கண்ணனும் கடுந்தவத்தினை மேற்கொண்டு சிவபெருமானை மகிழ்வித்தார். கண்ணின் பாசுபத விரதத்தில் மகிழ்வுற்ற சிவபெருமான் உமையம்மையுடன் காட்சி தந்தார். கண்ணன் சிவபெருமானிடம், அவரின் அம்சமான ஒரு குழந்தை தனக்கு வேண்டுமென விண்ணப்பித்தார். சிவபெருமானும் கண்ணனுக்கு கேட்ட வரத்தினை அளித்தார். கண்ணன் மற்றும் ஜாம்பவதி தம்பதிகளுக்கு சிவபெருமானின் அம்சத்துடன் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை சாம்பன் என்று அறியப்படுகிறது. [1]
கீதை
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவரர்களிடம் கொடுத்துவிட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.
முடிவு
பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டதத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப, கிருஷ்ணர் வைகுண்டம் புறப்படும் போது அவரது பக்தரான உத்தவர் வேண்டுதலுக்கு ஏற்ப அவருக்கு ஆத்ம உபதேசம் செய்தார். இதனை உத்தவ கீதை என்பர். ஒரு நாள் காட்டில் ஒரு வேடனின் அம்பு தாக்கி காலமானார். முனிவர்களின் சாபத்தின்படி யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். துவாரகை நகரமும் கடலில் மூழ்கியது.
சமீபத்திய ஆராய்ச்சி
குஜராத்திலுள்ளதுவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது.[2] அது மகாபாரத்திலும் பாகவத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப் பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.[3]

 

 

 

 

 

 

Copyright 2013 Yathavar Association of Singapore                                                                                                                                                    Website Designed & Maintained by Mani