vinayagar

ஸ்ரீ  ராம ஜெயம்
யாதவர் சங்கம
YATHAVAR ASSOCIATION

412, #06-414, Serangoon Road , Singapore - 218124

 

krishnar
Welcome to Yathavar Association (Singapore) WebSite
Home Events Contact Us About Us Enquiry Form

Main Menu

Committe Members
Yathavar History
Photo Gallery
Latest News
Membership Application Form
Change Of Address Form
Members Record
Meeting Minutes
 

 

 

Welcome to Yathavar Association (Singapore) Website

Yathavar Association Singapore's intention is to promote community's social, cultural, values and traditions among the new members.  To provide opportunities to the members to integrate within as well as other diverse communities.  The organisation will organize programs and activities to facilitate the young and all age groups to realize their identity, heritage and bond among each other.


For more detailed information contact :

 
E-mail - admin@sporeyathavar.org

 

The Main aim of this association is increasing the interaction among Yathavar's living in Singapore.

கிருஷ்ண ஜென்ம பூமி
http://3.bp.blogspot.com/-rnWIIqUvseI/UgzpibaofWI/AAAAAAAAABQ/JEpoj709wiA/s1600/1006301_555910177807735_439052734_n.jpg

அயோத்தி 'ராமஜென்ம பூமி' என்றால், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா இந்துக்களால் 'கிருஷ்ண ஜென்ம பூமி' என அழைக்கபடுகிறது.

இங்குள்ளமதுரா கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று வரும் பயண அனுபவத்தை வாசகர்களுடன் இவ்வாறுபகிர்ந்து கொள்கிறார்..

மதுராவில் கால் பதித்ததுமே குறும்புக் கண்ணன் (கிருஷ்ணனின் குழந்தைப்பருவ பெயர்) தன் பிஞ்சுப் பாதம் பதித்து, நின்ற, நடந்த, ஓடியஇடங்களிலா நாம் நிற்கிறோம் என்கிற எண்ணம் மேலோங்கி நம் உடல்சிலிர்க்கிறது.

மதுரா எங்குள்ளது?

மதுரா இந்திய மாநிலம்உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஓர் மாநகரமாகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும்தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. இதுமதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகவும் உள்ளது. (தகவல்விக்கிபீடியா)

சிறையில் கிருஷ்ணன் பிறந்த கதை சுருக்கமாக!
கம்சன் எனும்அரக்ககுணம் படைத்த அரசனை அழிக்க பிறந்தவன் கண்ணன். கம்சனின் சகோதரி தேவகிக்கும், அவளுடைய கணவர் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தைதான் கம்சனை அளிக்கப்போகிறான் எனும் தகவல் தேவகியின் திருமணத்தன்றே கம்சனுக்கு அசரிரீயாக ஒலிக்கிறது.உடனே கோபத்தில் தங்கையையே வெட்டிச் சாய்க்க முயன்றவனை 'எட்டாவது பிள்ளையால்தானேஉனக்கு அழிவு. அதை மட்டும் கொன்றுவிட்டு. உன் சகோதரியை கொன்ற பாவம் உனக்குவேண்டாம்' என்று வசுதேவர் அறிவுறுத்துகிறார்.

உடனே தம்பதியரை சிறையில்அடைக்க உத்தரவிடுகிறான் கம்சன்! அடுத்தடுத்து தேவகிக்கு பிறந்த ஆறு குழந்தைகளையும்குளத்தில் அடித்துக் கொன்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஏழாவது கரு தேவகியின்வயிற்றில் கலைக்கப் பட்டு வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோஹினியின் வயிற்றில்திருமாலின் அருளால் பலராமனாக அவதரிக்கிறது.

தேவகி கம்சனிடம் தன் ஏழாவதுகுழந்தை கலைந்துவிட்டதாக கூறுகிறாள். எட்டாவது குழந்தைக்காக கம்சன் காத்திருந்தபோதுதான் திருமாலின் கருணைப்படி உருவாக்கப்பட்ட யோகமாயா வேறொரு இடத்திலிருந்தநந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் பெண்ணாகப் பிறக்கவும் ஆவனசெய்யப்படுகிறது.

ஆவணிமாதம் தேய்பிறை அஷ்டமி, ரோகினி நட்சத்திரத்தில்சிறையினில் நள்ளிரவில் எட்டாவது மகனாகப் பிறக்கிறான் ஆலிலை நாயகன் கண்ணன்.கம்சனிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வேண்டுமே. வசுதேவரும்,தேவகியும்துடிக்கிறார்கள், தவிக்கிறார்கள். வரலாறு காணாத மழை என்பதுபோல் புராணம் காணாத மழைகொட்டித்தீர்க்கிறது. 'யசோதையிடம் கொண்டுபோய் இந்த தெய்வக்குழந்தையை சேர்ப்பி' என்றுகூறி அசரிரீ வசுதேவருக்கு வழிகாட்ட வசுதேவர் தன குழந்தையை கூடையில் சுமந்துசெல்கிறார். ஆதிஷேசன் குடைபிடிக்க, வெள்ளம் புரண்டோடும் யமுனை நதி வசுதேவருக்கு வழிவிடுகிறது. அக்கறையை அடைந்து நந்தகோபன் அரண்மனையில் 'என்ன தவம் செய்தனை யசோதை?' என்று மற்றவர் பொறாமைப் படும் அளவிற்கு பேறுபெற்ற யசோதையிடம் குழந்தையைசேர்க்கிறார் வசுதேவர்.

அத்துடன் யசோதைக்குப் பிறந்த யோகமாயாவை தூக்கிக்கொண்டு சிறை வந்து சேர்கிறார் வசுதேவர். குழந்தை பிறந்த செய்தி அறிந்து ஆவேசமாகவருகிறான் கம்சன். பின் பெண்குழந்தையா? என்று ஏமாற்றமடைகிறான். என்றாலும் அந்தகுழந்தையை உயிரோடுவிட மனமின்றி குழந்தையை குளத்துச் சுவரில் அடிக்க முற்படுகையில்தான் குழந்தை விண் நோக்கிப் பறக்கிறது. அவள் தான் திருமால் அனுப்பியயோகமாயாவாயிற்றே. 'கம்சா, எட்டாவதாகப் பிறந்தவன் மறைந்து வளர்கிறான். கண்டிப்பாகஉன்னைக் கொள்ள வருவான் ' என கூறி மறைகிறாள் யோகமாயா. கோகுலம் எனும்பிருந்தாவனத்தில் கண்ணன் குறும்புடன் சுட்டிக் குழந்தையாக வளர்ந்து, ராதையின்மணாளன் ஆனதும், கம்சனை வதைத்ததும் தனிப்பெரும் கதை! இதோ கண்ணன் பிறந்த புனிதபூமியான மதுராவிலிருந்து இனி

மதுரா கிருஷ்ணன் கோயில் பற்றி

கண்ணன்பிறந்த 'மதுரா', வளர்ந்த 'பிருந்தாவன்' இரண்டும் 'வ்ரஜபூமி ' என்றுஅழைக்கப்படுகிறது. கண்ணன் விரும்பி சாப்பிடும் பால், பால் ஸ்வீட், வெண்ணெய் என்றுமதுரா நகர் கடைவீதிகளில் ஒரே பால்மயம்தான்! மண் தம்ளர்களில் மண்வாசம் மணக்கமணக்கசூடான பால் தருகிறார்கள். கோபியர் கொஞ்சும் கிருஷ்ணன் தான் மாடுமேய்த்தவனாயிற்றே.அதற்கு சாட்சியாக மதுரா நகர வீதிகளில் இன்றும் பசுக்கள் மிகச் சுதந்திரமாக வளையவந்துகொண்டிருக்கின்றன.

ராதாவும்,கிருஷ்ணனும் காதல் மயக்கத்தில்கிரந்கியிருப்பது போன்ற பரவசம் தரும் எழில்கோலம்! காதல்தான் அன்பு. அந்த அன்பின்தீவிரத்தன்மையை உணர்த்துவதுதான் எங்களின் இந்த ஆனந்தகோலம் என்பதைச் சொல்லும்வகையில் இருக்கிறது. அதே மயக்கத்தில் 'ராதே ,கிருஷ்ணா..' என்று மனமுருகிநின்றுவிட்டு திரும்பினால், ராதாரமணர் கோயில்.

இந்த கோயிலின் உருவச் சிலைஒரே சாளக்கிராம கல்லில் செதுக்கப்பட்டது. அருகிலேயே மரத்தால் செய்யப்பட்ட 'ஹோகி' என்ற இருக்கையும், ஒரு சால்வையும் உள்ளது. இது சைதன்ய மகாபிரபு இந்த கோயிலுக்குஅளித்ததாம்.

ராதையின் உருவச் சிலைக்குப் பதிலாக! கோயிலுக்கு எதிரில்கிருஷ்ணன் சிலை உள்ளது. அதன் அருகில் ராதையின் சிலை இல்லை. அதற்கு பதிலாக அழகியகிரீடத்தை ராதையாக பாவித்து ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அருகில் வைத்துள்ளார்கள். பக்திப்பரவசத்தோடு கோயிலின் எல்லாப் பகுதிகளையும் பார்த்து ரசித்து சிலிர்த்துக்கொண்டிருக்கும்போதே, மனதுக்குள், எங்கே கிருஷ்ணன் பிறந்த அந்த சிறை? என ஒரு பெரியகேள்விக்குறி. இந்த கட்டிடமோ நவீன கட்டிடம். கிருஷ்ணன் பிறந்ததோ மதுராவின் சிறையின்ஒரு சிறு அறையில் என சந்தேகம் மேலோங்க, மக்கள் வரிசை வரிசையாக ஒரு குறிப்பிட்டஇடத்துக்கு செல்வதைப் பார்த்து பின் தொடர்ந்தேன். அருகில் தான் இருக்கிறது, அந்தபழமை மாறாத கம்பீரச்சிறை! ஒரு ஆள் மட்டுமே நுழைந்து நடக்கும்படியான அந்த குறுகியசந்துகளை எல்லாம் கடந்து நடக்க, நடக்க அட! 'மரங்களில் நான் அரசு' என்ற கண்ணன்அரசந்தளிர் போன்ற பிஞ்சுக் குழந்தையாய் அவதரித்த புனித இடம் கண் முன்னேவிரிகிறது.

புனிதபூமி தரும் புனித வாழ்வு!ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அந்த இடம்சிறிதும் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருவதால், நாமும் புராண காலத்தின்அந்த மணித்துளிகளில் நிற்கும் பேறு கிடைத்துவிட்டதாக சிலிர்க்கின்றனர்பக்தர்கள்!
http://1.bp.blogspot.com/-tfthnw99Nuo/Ug4vPVrSdvI/AAAAAAAAAEI/902noeN-Ld0/s320/998583_555908921141194_1761238239_n.jpg

கிருஷ்ணர் பிறந்த மதுராவில் கோவில் அருகேஒரு குளம்
பழமை எழில்கொஞ்சும் பிரமாண்டமாக இருந்தும் கண்டுகொள்ளப்படாத குளம்!மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலை அடைவதற்கு முன்னே ஒரு பிரம்மாண்ட குளம் உள்ளது.அதில் எந்நேரமும் நீரூற்று சுரக்கிறது. மாடங்கள்..., கோபுரங்கள், பச்சைபசேல் பாசிபடர்ந்த நீர் என்று மிக அழகிய பழமை எழிலோடு இருக்கிறது அந்தக்குளம். இருந்தாலும் அந்தக் குளம் மக்களால் கொஞ்சம்கூட மதிக்கப் படுவதில்லை. காரணம்கேட்டால், தேவகிக்குப் பிறந்த மற்ற ஆறு குழந்தைகளும் இந்த குளத்தின் சுவரில்தான்கம்சனால் அடித்துக் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்த குளத்தை எட்டிப்பார்ப்பதே பாவம் என்கிற நம்பிக்கை நிலவுகிறது

 

 

 

 

Copyright 2013 Yathavar Association of Singapore                                                                                                                                                    Website Designed & Maintained by Mani